--- --:--:-- --

தீர்ப்பை இஸ்லாமியர்கள் முழு மனதோடு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

4

ராமர் கோயிலை கட்ட மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெஹலான் பாகவி தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ராமர் கோவிலை இடித்துவிட்டு தான் மசூதி கட்டப்பட்டது என்பதை உச்சநீதிமன்றம் மறுத்து உள்ளதாகவும், இது மிக முக்கியமான ஒன்று என்றும் குறிப்பிட்டார்.

 

நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் தெஹெலான் பாகவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.நம்பிக்கையின் அடிப்படையிலேயே தீர்ப்பை நீதிபதிகள் எழுதியிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது எனவும், இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் காலம்காலமாக நீதி அமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும், தீர்ப்பை இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள் நிச்சயமாக அமைதி காப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் இந்த தீர்ப்பை நிச்சயமாக இஸ்லாமியர்கள் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon