--- --:--:-- --

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு- பிரதமர், தலைவர்கள் கூறுவது என்ன?

Modi 02

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பிரதமர் வெளியிட்ட தகவலில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் அமைதி, நல்லிணக்கத்தை நிலை நாட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை அயோத்தி தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சியும் வரவேற்றுள்ளது. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கிறது. ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம் என்று, அதன் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

 

அனைத்து தரப்பினரும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இனி அயோத்தியை வைத்து பாஜக அரசியல் செய்ய முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

அனைத்து தரப்பினரும் அயோத்தி தீர்ப்பை சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொள்ளவார்கள் என்று, மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை கண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை விருப்பு, வெறுப்புக்கு உட்படுத்தாமல் மத நல்லிணக்கம் போற்றி அனைவரும் முன்கெடுத்துச் செல்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

அயோத்தி வழக்கில் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி அனைத்துத் தரப்பினரும் அணுக வேண்டும். இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அவரவர் நம்பிக்கையைப் போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம் என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன்; அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாபர் மசூதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon