--- --:--:-- --

அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் : மு.க.ஸ்டாலின்

7

அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக்கொண்டு மத நல்லிணக்கத்திற்கு சேதாரமில்லாமல் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வே தீர்ப்பு வழங்கிய பிறகு நாட்டின் பன்முகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எச்சரிக்கையுடன் முன்னெடுத்து செல்லவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.

 

இந்த தீர்ப்பை வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon