--- --:--:-- --

மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில், சைக்கிள் வழங்க உத்தரவு – அமைச்சர் சம்பத்குமார்

5

மைச்சர் சம்பத்குமார் பேசுகையில், “ஜென்சி தரப்பினரின் கருத்துக்களை அறிந்து அவர்களுக்கு தேவையான தலைக்கவசத்தை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 15 மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் விடுதிகளில் ஆய்வு செய்துள்ளேன். உணவு, கழிவறை, விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துவருகிறோம்.

 

 

மாணவர்கள் புகார் அளிக்க பிரத்யேக தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு எனது நேரடி கண்காணிப்பில் உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தலைக்கவசம், நவீன குடிநீர் பாட்டில் உள்ளிட்டவைகளுடன் சைக்கிள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

2026-27 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தில் மொத்தம் 202 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் அனைவருக்கும் விரைவில் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். சமூகநீதி விடுதியில் மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாணாக்கர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.” என்று பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon