அதிமுக அரசு 10.5 சதவிகித ஒதுக்கீட்டை வழங்கினோம் – எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “10.5 சதவிகித இட ஒதுக்கீடு என்பது வன்னியர்களின் போராட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. அப்போது தான் அதிமுக அரசு 10.5 சதவிகித ஒதுக்கீட்டை வழங்கினோம். 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டதோடு, ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வந்த திமுக அரசு, அந்த ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்கவில்லை. அதனை நீட்டித்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கலாம். அதிமுக அரசு தான் வன்னியர்களுக்கு போராட்டத்திற்கு தீர்வு கண்டது. பாமகவினர் பல ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டுக்காக போராடினார்கள்.
அனைத்தும் அம்பாசங்கர் கமிஷன் அறிக்கை அடிப்படைகள் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினோம். ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்தோம் திமுக ஆட்சியில் கால அவகாசம் வழங்காததால் அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியவில்லை.” என்று பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




