--- --:--:-- --

கரூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 பேர் பலி

7

கரூர் மாவட்டம் குளித்தலை குமாரமங்கலம் அருகே சென்றபோது நெடுஞ்சாலையில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி மீது நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி நேருக்குநேர் மோதியது. இந்த கோர விபத்தில் 2 லாரிகளின் 2 டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

 

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon