தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் மழை..!
தமிழ்நாட்டில் இன்று பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள வானிலை மையம், தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் வெயில் அதிகரிக்கும் எனக் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று பலத்த காற்றுடன் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் நாளை முதல் வரும் 25-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள வானிலை மையம், கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உள் பகுதிகளில் வரும் 24-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




