பொய்யான பிரச்சாரம் பரப்புகிறார் – கல்வி உதவித் தொகை குறித்து வீடியோ வெளியிட்ட மாணவருக்கு அமைச்சர் பதில்
அம்பேத்கர் அயலக கல்வி உதவி திட்டத்தின் கீழ் மலேசியாவில் பி.எச்.டி பயின்று வரும் மாணவர் தனக்கு கல்வி உதவித் தொகை கிடைப்பதில் சிரமம் இருப்பதால் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியிருந்த நிலையில், இதற்கு சட்டசபையில் பதில் அளித்த சமூகநலத் துறை அமைச்சர் வன்னி அரசு, மாணவருக்கு அனைத்து கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால் 10 மாதங்கள் ஆகியும் அவர் தனது செலவுகள் குறித்த பில்களை சமர்பிக்காமல் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு 2-ம் ஆண்டுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் சமூகவலைதளங்களில் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருவதாக கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




