--- --:--:-- --

கோவை மாணவர் கொலை – அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து தி.மு.க வெளிநடப்பு

8

கோவையில் மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தொடர்ந்து, “100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் த.வெ.க அரசு, இந்த 100 நாட்களில் சட்டம் – ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும். போதைக்கு எதிரான தொடர் ஒழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

கோவையில் மாணவர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கோஷ்டி மோதல் என்று அமைச்சர் கூறுகிறார்.இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்த நிலையில், கோவை, திருவான்மியூர் மாணவர் கொலை வழக்கில் த.வெ.க விளக்கம் முறையாக இல்லை என்று தி.மு.க வெளி நடப்பு செய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon