--- --:--:-- --

ரூ. 8 கோடி ஊழல் புகார் அளித்த அறப்போர் இயக்கம்..!

3

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடத்துவதற்காக, அரசு ஏரியிலிருந்து சட்டவிரோதமாக ரூ. 8 கோடி மதிப்பிலான மண்ணைத் திருடித் தனது குடும்ப நிலத்தில் கொட்டி சமப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, அவரது மகன் எ.வ. குமரன் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் விரிவான ஊழல் புகார் அளித்துள்ளது.

 

 

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் 124 ஏக்கர் பரப்பளவில் ‘கலைஞர் திடல்’ என்ற பெயரில் திமுக மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளையும் அப்போதைய அமைச்சராக இருந்த எ.வ. வேலு முன்னின்று நடத்தினார்.

 

 

இந்த 124 ஏக்கர் நிலம் (சர்வே எண்: 57), எ.வ. வேலுவின் மகன் எ.வ. குமரன் இயக்குனராக உள்ள ‘அருணை புரோடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டதாகும். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து ரூ. 46 கோடி வழிகாட்டி மதிப்பில் இந்நிலம் வாங்கப்பட்டிருந்தாலும், சந்தை மதிப்பின்படி இதன் விலை ரூ. 200 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

 

 

மாநாடு நடத்துவதற்கும், எதிர்காலத்தில் அந்த நிலத்தைப் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக நிலத்தைச் சமப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. இதற்காகத் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த எ.வ. வேலு, அந்த நிலத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலப்பம்பாடி ஏரியிலிருந்து (சர்வே எண்: 58) லாரி லாரியாக மண்ணைத் திருடித் தனது மகனின் நிலத்தில் கொட்டியுள்ளார்.

 

 

 

தமிழ்நாடு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டப்படி (Tamil Nadu Mines and Minerals Concession Rules – Section 12(2)), விவசாய பயன்பாட்டிற்காக ஏரியின் மேலடுக்கு வண்டல் மண்ணை அதிகபட்சமாக 1 மீட்டர் ஆழம் வரை மட்டுமே அள்ள அனுமதி அளிக்க முடியும். ஆனால், இந்த ஏரியில் எவ்வித சட்டபூர்வ அனுமதியுமின்றி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 3 மீட்டர் முதல் 7 மீட்டர் ஆழம் வரை (சராசரியாக 5 மீட்டர்) ஆழமாக தோண்டி மண் அள்ளப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon