மேகதாது அணை ஆபத்து குறித்து வெதர்மேன் எச்சரிக்கை..!
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் (KTCC) நள்ளிரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்துள்ள நிலையில், இன்றிரவும் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் தனியார் வானிலை வலைப்பதிவர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வானிலை சூழல் அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.இதேவேளையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு தினங்களை விட மழை சற்று குறைந்திருந்தாலும், கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் தமிழகத்திற்கு நீர்வரத்து தொடர்ந்து சீராக இருக்கும். கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணைக் கட்டப்பட்டால், கபினியிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் மேட்டூருக்கு வந்து சேருவது தடைபட்டு, தமிழகத்திற்கு வரும் நீரின் அளவும் நேரமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.



