--- --:--:-- --

நீட் முதுநிலை தேர்வு முறையில் முக்கிய மாற்றங்கள்..!

3

நீட் முதுநிலை தேர்வு, இனி ஒரே ‘ஷிப்ட்’டில் நடத்தப்படும்; மாணவர்கள் நலன் கருதி தேர்வுக்கான வினாக்களும் 200லிருந்து 180 ஆக குறைக்கப்பட்டுள்ளது’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு ’நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்குத் தனித்தனியாகத் தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், இந்தாண்டிற்கான நீட் முதுநிலை தேர்வு வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.

 

 

இந்நிலையில், தேர்வர்களின் நலன் கருதி நீட் முதுநிலை தேர்வில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை, மாலை என இரண்டு வேளைகளில் நடத்தப்பட்டுவந்த இத்தேர்வு, நடப்பாண்டு முதல் ஒரே வேளையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதியான சூழலில், ஒரே வினாத்தாள் இருப்பதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தாமதமாக விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வேறு நகரங்களில் தேர்வு எழுதும் நிலை இருந்துவந்தது.

 

இந்தாண்டு முதல் அனைத்து தேர்வர்களுக்கும் அவரவர் வசிக்கும் நகரங்களிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்படவுள்ளது. மொத்த வினாக்களின் எண்ணிக்கை 200இல் இருந்து 180ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு எழுதுவதற்கான நேரம் குறைக்கப்படாததால் மாணவர்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

 

தேர்வு முறைகேடுகளை தடுக்க விண்ணப்பிக்கும்போதும், தேர்வு நாள் அன்றும் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைரேகை முறை சரிபார்ப்பு தோல்வியுற்றால் விழித்திரை மெட்ரிக் முறையில் சரிபார்ப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon