--- --:--:-- --

புல்புல் புயல் தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

8

மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள புல்புல் புயல் தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புல்புல் புயல் தீவிரமடைந்த நிலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கரையை புல்புல் புயல் அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .இன்று முதல் 10 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 சென்டி மீட்டர் மழையும், சிவகங்கையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனிடையே கடலூர், நாகை, காரைக்கால், தூத்துக்குடி, புதுச்சேரி பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon