மதுரை, கோவை மெட்ரோ திட்டம் – மீண்டும் நிராகரித்த மத்திய அரசு
மதுரை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என தமிழ்நாடு அரசுக்கு மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை என்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. தி.மு.க ஆட்சியில் முன் மொழிந்த மெட்ரோ ரயில் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு நிராகரித்த நிலையில் மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.






