--- --:--:-- --

சென்னை பெரம்பூர் அருகே காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி உயிரிழப்பு

1

பெரம்பூர் அருகே காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை பெரம்பூரில் ரமணா நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது 8வயது மகள் ஜெனேஃபா லில்லி தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

 

இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அவரது மகளை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செந்தில்குமார் அனுமதித்துள்ளார்.

 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி லில்லி உயிரிழந்தார். காய்ச்சலால் சிறுமி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon