சென்னையில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு : ஜூனில் பாதிப்பு திடீர் உயர்வு
சென்னையில் டெங்கு பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. 2026-ஆம் ஆண்டுக்கான மாத வாரியான டெங்கு பாதிப்பு விவரங்களின்படி, ஜனவரியில் 311 பேரும், பிப்ரவரியில் 202 பேரும், மார்ச் மாதத்தில் 167 பேரும், ஏப்ரலில் 130 பேரும், மே மாதத்தில் 154 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ஜூன் மாதத்தில் டெங்கு பாதிப்பு 205 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களுடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் பாதிப்பு அதிகரித்திருப்பது சுகாதாரத் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், கொசு உற்பத்தியை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுதல் அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






