--- --:--:-- --

பத்திரப்பதிவுக்கு விழுந்த சம்மட்டி அடி! பழனியில் மீட்கப்பட்ட ரூ.100 கோடி சொத்து!

10

ழனி கோயில் நிர்வாகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கோயில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமல், உண்மைகளை மறைத்து, தனி நீதிபதியைத் தவறாக வழிநடத்தி இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே, இந்த பத்திரப்பதிவு முற்றிலும் செல்லாது” எனத் தீர்ப்பளித்துள்ளனர்.

 

 

மேலும், “தவறு செய்த சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சஸ்பெண்ட் செய்தது மட்டும் போதாது, இந்த மோசடியின் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிமன்றம் சாடியுள்ளது.

 

 

நீதிமன்றத்தின் தலையீட்டால் ரூ.100 கோடி மதிப்புள்ள பழனி முருகன் கோயில் நிலம் தற்காலிகமாக மீட்கப்பட்டிருந்தாலும், விடுப்பில் சென்ற அதிகாரி, பொறுப்பேற்ற சில தினங்களில் நள்ளிரவு வேகத்தில் பத்திரம் பதிவு செய்த கொடைக்கானல் அதிகாரி, மற்றும் அந்த ரூ.2 கோடி காசோலைகளின் பின்னணி என அனைத்துப் புள்ளிகளையும் இணைத்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon