மேகதாது விவகாரம் – தி.மு.க ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டம் குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி, தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
இந்த திட்டம் தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த முக்கியப் பிரச்சினையை அவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.






