--- --:--:-- --

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்..!!

4

மிழகத்தில் 2027-ம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளன. பொது மக்கள் அனைவரும் இந்த கணக்கெடுப்பின் ‘சுய விவரப் பதிவு’ (Self-Enumeration) முறையில் தாங்களாகவே முன்வந்து தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

 

 

இதுதொடர்பாக ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக, பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைனில் விவரங்களை பதிவுசெய்யும் ‘சுய விவரப் பதிவு’ (Self-Enumeration) கட்டம் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறும். தொடர்ந்து, 2-ம் கட்டமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணி (House Listing Operations) ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெறும்.

 

 

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு வரலாற்றிலேயே முதல் முறையாக, குடிமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே பாதுகாப்பான ஆன்லைன் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலமாக தங்களது கணக்கெடுப்பு விவரங்களை எளிதாக வழங்கும் ‘சுய விவரப் பதிவு’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களது சுய விவரப் பதிவை நிறைவு செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு குடும்பமும் தங்களது முழுமையான மற்றும் துல்லியமான விவரங்களை வழங்க வேண்டும் என்றும், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு வெற்றிகரமாக நடைபெற கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதற்கிடையில், முதலமைச்சர் விஜய் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தனது சுய விவரப் பதிவுப் பணியை கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்தார். அத்துடன், இத்திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், இது வெறும் தலைகளை எண்ணும் சாதாரண கணக்கெடுப்பு அல்ல; நீங்க வழங்கும் துல்லியமான தரவுகள்தான் எதிர்கால பொது நலத்திட்டங்கள் அனைத்திற்கும் மிக முக்கியமான அடித்தளமாக அமையப் போகின்றன. எனவே, ஒவ்வொரு குடும்பமும் தங்களது துல்லியமான விவரங்களை வழங்குவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சுய விவரப் பதிவை ஆன்லைன் மூலமாக மிக எளிதாகச் செய்து முடிக்க முடியும். நான் ஏற்கனவே எனது பதிவை செய்து முடித்துவிட்டேன். நீங்க வழங்கும் உங்களது தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon