தி.மு.க.வுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் அ.தி.மு.க ஈடுபடவில்லை – அக்ரி கிருஷ்ண மூர்த்தி
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. மாறாக த.வெ.க ஆட்சியால் விலைபேசப்பட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் சென்றிருக்கிறார்கள்.
அ.தி.மு.க-வில் எந்த உட்கட்சி பூசலும் இல்லை. அ.தி.மு.க, தி.மு.க என்ற தீய சக்திக்கு எதிராக உருவாக்கப்பட்ட இயக்கம் என்பதை நாங்களும் அறிவோம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை கூறியுள்ளார். எந்த காலத்திலும் தி.மு.க-வுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் அ.தி.மு.க ஈடுபடவில்லை” என்றார்.






