கூடங்குளம் அணுமின் நிலையம் சென்சிடிவ் தரவுகள் கசிந்தது எப்படி? மாணிக்கம் தாகூர் கேள்வி
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மிக முக்கியமான மற்றும் சென்சிடிவ்வான தரவுகள் கசிந்து, ‘டார்க் வெப்’ இணையத்தில் பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இது மிகவும் ஆபத்தான, கடுமையான தேசியப் பாதுகாப்பு மீறலாகும். நாட்டின் புதிய தரவுப் பாதுகாப்புச் சட்டம் எங்கே போனது என்றே தெரியவில்லை.
அரசாங்கத்திடம் இருக்க வேண்டிய முக்கியத் துறைகளை ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் தனியார் மேலாண்மையிடம் ஒப்படைக்கும்போதே இந்த ஆபத்து தொடங்கிவிட்டது.மோடி அரசின் இத்தகைய மெத்தனப் போக்கு இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.






