விஜயை சந்தித்த பின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
அரசு பேருந்து கட்டணத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம். த.வெ.க ஆட்சி வந்த பிறகு ஆர்.டி.ஓ அலுவலகங்களில் ஆம்னி பஸ் அனுமதி பெற லஞ்சம் வாங்கவில்லை. விழா காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இடைத்தரகர்கள் மட்டும் பணம் கொடுக்க முயற்சிக்கிறார்கள்.
லஞ்சம் இல்லாததால் அரசு கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம். ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலா பேருந்து அனுமதி கொடுக்க வேண்டும் என முதல்வரை சந்தித்த பின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்






