சீரியல் நடிகை டெல்னாவின் மொட்டைமாடி போட்டோஷூட்..!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் டெல்னா. இவர் ‘அன்பே வா’ சீரியல் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மேலும், இவர் நடித்து வந்த ‘ஆடுகளம்’ சீரியல் சமீபத்தில் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை நடிகை டெல்னா வெளியிடுவார். அந்த வகையில் மொட்டைமாடியில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை டெல்னா.






