இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி
இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
இதேபோல தொடரை கைப்பற்ற வங்கதேச அணி வீரர்களும் முனைப்பு காட்டுவார்கள் என்பதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் 1 க்கு பூஜ்ஜியம் என முன்னிலை வகிக்கிறது.






