--- --:--:-- --

கரூர் சம்பவத்தில் அரசு வேலை வழங்குவது ஆபத்தான முன்னுதாரணம்: டிடிவி தினகரன்

8

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயலாகவும், ஆபத்தான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 

 

அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல என்றும், திறமை, தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொதுமக்களின் உரிமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

எனவே, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon