--- --:--:-- --

அரசு வெப்சைட்டில் ஜி-ஓ-வை காணோம்..!

4

மிழிகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி வெளிப்படைத்தன்மையான ஆட்சி நடக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கான அரசாணையே இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பல துறைகளில் அரசாணை கடைசியாக 2 முதல் 3 வருடங்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டதாகவே உள்ளது.

 

 

தமிழகத்தில் கடந்த மே 10-ந் தேதி த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்தது. அன்றைய தினமே, இலவச மின்சாரம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு கையைழுத்து போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பெண்கள் சிறப்பு படை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. பொதுவாக அரசு தரப்பில், ஒரு திட்டம் கொண்டுவரப்படும்போது அது குறித்த அரசாணை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ஒரு சில துறைகளை தவிர மற்ற அனைத்து துறைகளும் புதுப்பிக்கபடாமல் உள்ளது.

 

 

குறிப்பாக, ஒரு சில துறைகளில் கடைசியாக பதிவேற்றம் செய்யப்பட்ட அரசாணை 2 முதல் 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உள்ளது. தற்போதைய திட்டங்கள் குறித்த அரசானை முந்தைய ஆட்சியில் கடைசி 2 ஆண்டுகள் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கான அரசாணை பதிவேற்றம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்தபோது இது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

 

 

இந்த இணையதளத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கடைசியாக 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசி அரசாணை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, அதேபோல், வேளாண்மை – விவசாயிகள் நலத்துறையில், ஏப்ரல் 2025, கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அக்டோபர் 2024, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மார்ச் 2026, வணிக வரி மற்றும் பதிவுத்துறை நவம்பர் 2025, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஜனவரி 2022-ம் ஆண்டு அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

எரிசக்தி துறையில், கடைசியாக அக்டோபர் 2024, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அக்டோபர் 2025, நிதித்துறை ஜூலை 2, 2026, கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை ஜனவரி 2026, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஜூன் 23, 2026, உயர்கல்வித்துறை நவம்பர் 2024, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஜூலை 2024, உள்நாட்டு, மதுவிலக்கு மற்றும் கலால் துறை பிப்ரவரி 2026, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை பிப்ரவரி 2026, மனிதவள மேலாண்மைத் துறை மார்ச் 2026-ல் கடைசியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை மார்ச் 2024, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை பிப்ரவரி 2026, தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை நவம்பர் 2025, சட்டத்துறை டிசம்பர் 2023, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மே 2025, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை பிப்ரவரி 2024, இயற்கை வளங்கள் துறை, ஜனவரி 2024, திட்டமிடல், மேம்பாடு மற்றும் சிறப்பு முன்னெடுப்புகள் துறை பிப்ரவரி 2025 பொதுத்துறை மே 2026, பொது (தேர்தல்) துறை ஜூன் 2015, பொதுப்பணித் துறை நவம்பர் 202-ல் கடைசியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கடைசியாக செப்டம்பர் 2025, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஜூன் 2026, பள்ளி கல்வித்துறை, டிசம்பர் 2025, சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை நவம்பர் 2024, சிறப்புத் திட்ட அமலாக்கம் ஏப்ரல் 2025, தமிழ் மேம்பாடு மற்றும் தகவல் துறை பிப்ரவரி 2026, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறக்கொடைத் துறை ஜனவரி 2026, போக்குவரத்து துறை பிப்ரவரி 2025, நீர் வளத் துறை, ஜனவரி 2026, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மார்ச் 2026, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஜூன் 2022-ல் கடைசியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

இதில் ஓரிரு துறைகளை தவிர மற்ற அனைத்து துறைகளின் அரசாணைகளும் 2-3 வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக தற்போதைய த.வெ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிங்கப்பெண்கள் சிறப்பு படை திட்டம், மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான திட்டம் குறித்த அரசாணை இணையத்தில் கிடைக்காத நிலையில், பொதுவெளியில் கிடைக்கின்றன. த.வெ.க ஆட்சி திட்டங்கள் மட்டும் இல்லாமல், கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான அரசாணையும் பதிவேற்றம் செய்யப்பட்டாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது,

 

Leave a Reply

Right Menu Icon