--- --:--:-- --

தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம் – த.வெ.க.விற்கு அப்பாவு கண்டனம்

7

10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஐ.டி கார்டில் ஜாதி பெயர் சேர்ப்பதற்கு தி.மு.க தலைவர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாதி பாகுபாட்டை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்ட அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா வழிவந்த கலைஞர், அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள தலைவர்கள் பெயர்களை நீக்கி ஜாதி கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.

 

 

தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரம் குடியிருப்புகள் கட்டி அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்தோடு வாழ வழி வகுத்தவர் கலைஞர். அதே வழியில் வந்த இன்றைய கழகத் தலைவர் ஸ்டாலின், “காலனி ” என்ற சொல் ஒரு சமூக மக்கள் வாழுகின்ற குடியிருப்பு என்பதை அடையாளப்படுத்துவதால் அச்சொல்லையே நீக்க சட்டம் கொண்டு வந்தவர்.

 

 

அவ்வாறு பாடுபட்டு ஒழித்து வந்த சாதி அடையாளங்களை ஆட்சி பொறுப்பில் இருக்கின்ற வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பான 10,12 ஆம் வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவிகளின் அடையாள அட்டையில்- பெயர், ஊர், சாதி அடையாளங்கள் குறிப்பிடப்படும் என்பது ஆர்.எஸ்.எஸ் ஆட்சியின் தொடக்கமாக தெரிகிறது.

 

அதனை நிரூபிக்கும் வகையில் தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வியாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் இந்த அரசுக்கு முட்டு கொடுத்து வருவதை பார்த்தாலே தெரிகிறது. CM-sir இதனை ஒரு போதும் தமிழ்நாட்டில் அனுமதிக்கவும் கூடாது, தொடரவும் கூடாது. தீண்டாமைக்கு தீனியும் போட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon