--- --:--:-- --

முதல்வர் விஜய்யின் இன்றைய சட்டமன்றப் பேச்சு ரியல் அரசியலுக்குப் பயன்படாது: டாக்டர் கிருஷ்ணசாமி

10

டந்த 40 தினங்களாக விஜய் காட்டிய மௌனம் கலைந்து, ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மூலம் தனது அரசியல் எதிரிகளையும், கொள்கை எதிரிகளையும் துவம்சம் செய்துவிடப் போகிறார் என்று இன்று பலரும் எதிர்பார்த்தனர்.

 

 

தங்களது கட்சிக் கூட்டங்களிலும் தேர்தல் மேடைகளிலும் மாநாடுகளிலும் அரசியலுக்காக ஆதாரமின்றிக் கூட சில விஷயங்களைப் பேசிவிடலாம்; ஏன், திரைப்படங்களில்கூட வசனகர்த்தா எழுதியபடி வசனத்தை முழங்கிவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளில் அவ்வாறு பேச இயலாது; ஆதாரம் இல்லாமல் எதையும் பேசவும் கூடாது.

 

 

டாஸ்மாக்கில் ”Party Fund” அதாவது, கட்சி நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள் என்று முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்த விஜய், எந்தக் கட்சிக்கு அந்த Fund சென்றது என்பது குறித்த ஆதாரத்தையும் வெளியிட்டு இருந்தால், அது அரசியல் பூதாகாரமாக வெடித்திருக்கும்.

Leave a Reply

Right Menu Icon