--- --:--:-- --

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது குழந்தை மரணம்..!

01

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த தகவல் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை கிராமத்தில் புலம்பெயர் தம்பதியின் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டார். அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

 

 

குழந்தை வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் முதல்கட்டமாக பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சு என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையே, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிறுமி உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 3 வயது குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சியை பகிர்ந்துள்ள திமுக எம்பி கனிமொழி, “கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

 

அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” என்று விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon