--- --:--:-- --

சென்னையில் வெப்ப அலை வீசும்..!

2

மிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

 

 

அதேபோல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளையும், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வரும் 24ஆம் தேதியும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 25ஆம் தேதியும் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

 

உள் தமிழக பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 3-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

 

 

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41-42° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon