--- --:--:-- --

ஈரானை தவெக கைப்பற்றினால்தான் 6 சிலிண்டர் தரமுடியும் – சீமான்

3

மிழ்நாட்டில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரியுமா என முதலமைச்சர் விஜய்யை சீமான் சாடியுள்ளார். மக்கள் அறிவுத் தலைமையை நோக்கிச் செல்லாமல் கவர்ச்சியின் பின்னால் செல்வதாக வருத்தப்பட்ட சீமான், இனி எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, ஓரிடத்தில் கூட டெபாசிட் கூட தக்கவைக்காமல் தோல்வியைத் தழுவியது. வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் இதுவரை மூன்றாவது பெரிய கட்சியாக இருந்துவந்த நாம் தமிழர் கட்சி, தவெகவின் வருகையால் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

 

தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற நிலையில் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்தார். தேர்தல் பரப்புரைகளில் விஜய்யை சீமான் மிக கடுமையாக விமர்சித்திருந்தபோதும் அவரை நேரில் சென்று சந்தித்தது பேசுபொருளானது.

இந்நிலையில், சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். அதில் பங்கேற்ற சீமான், தமிழக அரசின் கடன் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தார். போர் புரிந்து ஈரானை கைப்பற்றினால்தான் தவெக அறிவித்த 6 சிலிண்டர்களை தரமுடியும் எனவும் சீமான் கிண்டலாக குறிப்பிட்டார்.

 

மக்கள் அறிவுத் தலைமையை நோக்கிச் செல்லாமல் கவர்ச்சியின் பின்னால் செல்வதாகவும் சீமான் விமர்சித்தார். இனி எந்தப் போராட்டத்துக்கும் தான் செல்லப் போவதில்லை என குறிப்பிட்ட சீமான், தேர்தல் தோல்வியை கண்டு நாம் தமிழர் கட்சியினர் துவண்டு போக மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon