இரட்டிப்பான குற்றங்கள்: தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது.
எனவே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தான் அரசு நிர்வாகத்தின் முதன் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.






