த்ரிஷா சம்பளம் 12 கோடியா.. என் சம்பளம் இத்தனை லட்சம் தான்: சனம் ஷெட்டி
நடிகை சனம் ஷெட்டி சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருபவர். தேர்தல் நேரத்தில் அவர் விஜய்யின் தவெக-வுக்கு ஆதரவாகவும் தொடர்நது குரல் கொடுத்து வந்தார்.
மேலும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு விஜய் – த்ரிஷா ஜோடியாக வந்தபோது சனம் ஷெட்டி கடுமையாக தாக்கி பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.விஜய் முதலமைச்சராக பதவியேற்றபிறகு த்ரிஷாவின் சம்பளம் 5 கோடியில் இருந்து 12 கோடியாகிவிட்டது என ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
அதற்கு கமெண்ட் செய்து இருக்கும் சனம் ஷெட்டி ‘என் சம்பளம் 12 லட்சம் தான்’ என குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு நீங்கள் த்ரிஷாவாக இருக்கனும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்த நிலையில், ‘ஆம், நான் த்ரிஷா இல்லை’ என பதில் கொடுத்துள்ளார்.





