மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் – கண்காணிக்க உத்தரவு
மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் மற்றும் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பார்கள், பெட்டிக்கடைகளில் மது விற்பனையை தடுக்கவும், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் அருகே சோதனையிடவும், ரயில்வே போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்படவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




