கொலம்பியாவில் சாம்பி பேரணி!
கொலம்பியாவில் சாம்பி வேடமிட்டு வயது வித்தியாசமின்றி பொதுமக்கள் பேரணி சென்றது வியப்பில் ஆழ்த்தியது. பார்க்கவே கோரமான முகம், கொடூரமான முகத் தோற்றத்துடன் சாம்பி மென் கெட் அப் உடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேரணியாக சென்ற காட்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொலம்பியாவில் ஆண்டுதோறும் சாம்பி வேடமிட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் சாம்பி வேடமிட்டு வீதிகளில் உலா சென்றனர். முற்றிலும் வித்தியாசமான இந்த நிகழ்ச்சியை காண அமெரிக்கா, சிங்கப்பூர், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொலம்பியாவில் குவிந்தனர்.

பார்வையாளர்களை அச்சமடைய செய்யும் சாம்பி கெட்- அப் உடன் சிறுவர்கள் வலம் வந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். 2001இல் கலிபோர்னியாவில் தொடங்கி இன்றுவரை தொடரும் இந்த சாம்பிக்கள் அணிவகுப்பு பொதுமக்களுக்கு காட்சி விருந்தாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்கர்களிடம் மட்டும் பிரபலமடைந்த இந்த சாம்பிக்கள் அணிவகுப்பு தற்போது கடல்கடந்தும் ரசனை மிக்க ஒன்றாக மாறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




