--- --:--:-- --

பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் – விஜய்க்கு கமல் ஆதரவு

2

வெகவை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால் பதவியேற்பு தள்ளிப்போகிறது.

 

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததை தொடர்ந்து விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தனர். விஜயை கைகுலுக்கி சால்வை அணிவித்து வரவேற்ற ஆளுநர், நினைவுப் பரிசும் வழங்கினார். விஜயின் கடிதத்தை ஏற்று ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடிதத்தில் 112 எம்எல்ஏக்களின் விவரம் மட்டுமே இருந்ததால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கோரியதாக தகவல் வெளியானது. இதையடுத்து 2வது முறையாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விஜயின் சட்ட வல்லுநர்கள் குழு ஆளுநரை 2வது முறையாக சந்தித்து விளக்கம் கொடுத்தது.

 

இன்று மீண்டும் விஜய் ஆளுநரை சந்தித்து சுமார் 40 நிமிடத்திற்கும் மேலாக விளக்கம் அளித்தார். அப்போது, “113 எம்எல்ஏக்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? வேறு எந்த கட்சி ஆதரிக்கும்? 113 எம்எல்ஏக்களை வைத்து நிலையான அரசு அமைக்க முடியுமா?” என்பது போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைக்காததால் விஜயின் பதவியேற்பு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போகிறது.

 

 

இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் ஸ்டாலின் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.

 

 

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.

 

‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon