ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனசார வருந்தினார் – அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன்
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனம் வருந்தியதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 25-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், ரிசார்ட்டிற்கு புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.வும் அதிமுக மாநில செயலாளருமான அன்பழகன் வருகை புரிந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் புதுச்சேரியில் தங்கியிருப்பது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசியல் வெயில் அதிகமாக உள்ளது; அதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி வந்துள்ளனர்; திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்தார் – புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்
முதல்வர் ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி வருந்தினார் என தெரிவித்த அன்பழகன், “ஒரு உண்மையைச் சொல்கிறேன். அவரை சந்தித்து, என்னுடைய வெற்றிச் சான்றிதழை தரும்போது. மனது கஷ்டமாக இருக்கிறது. ஸ்டாலின் எல்லாம் எப்படிப்பட்ட தலைவர். அவரே வெற்றி வாய்ப்பை இழக்கும் அளவுக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். மனதார கஷ்டப்பட்டார்” என்று தெரிவித்தார். அனைவரும் தலைவர்களுக்கு தெரியாமல் யாரும் இங்கே வரமுடியாது. 47 எம்.எல்.ஏ.-க்களில் சிலர் இப்போது வந்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அதிமுக ஒரு எஃகு கோட்டை இதில் எந்த ஓட்டையும் இல்லை என கூறினார்.
அனைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்தான். எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கடலில் குதிக்க சொன்னாலும் அவர்கள் குதிப்பார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக கட்சி எல்லாமே என்றும் தலைமை பண்புள்ளவர்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்தார்.





