--- --:--:-- --

5, 8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எப்படி நடத்தப்படும்?

21

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு 60 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

 

நேரடி கேள்விகள் அல்லாமல் அடிப்படையான புரிதல் இருக்கின்றனவா, மாணவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதை அறியும் வகையிலே வினாக்கள் கேட்கப்படும் என துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். மீதமுள்ள 40 மதிப்பெண்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் உள் மதிப்பீடு சராசரி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடக்க நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்க உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள குறுவள மையங்களில் 5 மற்றும் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களை கொண்டு விடைத்தாள் மதிப்பீடு நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மதிப்பீடு முடிந்தவுடன் மதிப்பெண் பட்டியல், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

திறன் அடிப்படையிலான தேர்வு முறை அவசியம் என்றால் அது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்கின்றனர் கல்வியாளர்கள். ஒவ்வொரு மாணவரின் விபரங்களும் அடங்கிய பள்ளிக் கல்வித்துறையின் இ‌எம்‌ஐ‌எஸ் இணையதளத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மதிப்பெண்களும் பதிவேற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடப்பாண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்ல எந்த தடையும் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்யலாம் என்பதை அப்போது முடிவு செய்வோம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon