தொகுதிக்குள் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு… அமைச்சர் சாமிநாதன் உற்சாகம்!
பல்வேறு தரப்பினரை சந்தித்து வாக்கு சேகரிக்கும் அமைச்சர் சாமிநாதன்
காங்கேயம்: திமுகவின் காங்கேய்ம் வேட்பாளரான அமைச்சர் சாமிநாதன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் இரவு என்று பாராமல் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவரை, ஆரத்தழுவி ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்று மக்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஏப்ரல் 8-ம் தேதி இரவு சென்னிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் சாமிநாதன் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அண்ணா நகர் பேருந்து நிலையம், திருநகர் மற்றும் பொறையன் காடு ஆகிய இடங்களில் இரவு நேரத்திலும் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார். தியாகிக்குமரன் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் இச்சுப்பட்டி குடியிருப்புப் பகுதிகளில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைத் துண்டுப் பிரசுரங்களாக வழங்கி வாக்குச் சேகரித்தார்.

குறிப்பாக, காளிக்கா டெக்ஸ் குடியிருப்பு மற்றும் சரவணாபுரி பகுதிகளில் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய அவர், தொழிலாளர் நலன் காக்கப்படும் என உறுதியளித்தார். கொளத்துப்பாளையம் நால்ரோடு மற்றும் எம்.பி.என் நகர் பகுதிகளில் திரண்டிருந்த இளைஞர்களிடம், வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
இரவு நேரப் பிரச்சாரத்திலும் மக்களிடையே காணப்பட்ட உற்சாகம், காங்கேயம் தொகுதியில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. “சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்ற தாரக மந்திரத்தோடு அமைச்சர் சாமிநாதன் மேற்கொண்டு வரும் இந்தப் பிரச்சாரப் பயணம், தொகுதி முழுவதும் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.





