போர் பாதிப்பு – 320 மில்லியன் டாலர் நிவாரணம் அறிவித்த இலங்கை
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காகவும், மீனவர்களுக்காகவும் இலங்கை அரசு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க, சுமார் 320 மில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட நிவாரணத் தொகுப்பை செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இது அந்நாட்டு வரலாற்றிலேயே வழங்கப்பட்ட மிகப்பெரிய அரசு உதவித் திட்டமாகும். 2.2 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில், போரினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினருக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.






