--- --:--:-- --

பல்லடத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்; மாநாடாக திரண்ட மக்கள் வெள்ளம்..!

Oplus_16908288

Oplus_16908288

பல்லடம்: ‘இது செயல்வீரர்கள் கூட்டமா அல்லது மாநில மாநாடா?’எனப் பல்லடம் பகுதிவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது திமுக வேட்பாளர் செல்வராஜுக்காக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம்.

பொதுவாக ‘செயல்வீரர்கள் கூட்டம்’ என்றால் கட்சி நிர்வாகிகள் மட்டும் வந்து செல்வார்கள். ஆனால், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்ததோ அப்படியே உல்டா! முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்படி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு, மக்கள் வெள்ளம் அலைமோதியதைப் பார்த்தால் ஏதோ பெரிய மாநாட்டிற்கு வந்த உணர்வைத் தந்தது.

மேடை அதிர வைத்த ‘மின்னல்’ கனிமொழி!

 

திமுக
பல்லடம் செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநாடு போல் கலந்து கொண்ட திமுகவினர்.

இந்தக் கூட்டத்தின் ‘ஸ்டார் அட்ராக்ஷன்’ திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி. அவர் மேடை ஏறியதும் தொண்டர்களின் உற்சாகம் இரட்டிப்பானது. பல்லடம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வராஜுக்காக வாக்கு சேகரித்த கனிமொழி, தனது பாணியில் எதிர்க்கட்சிகளை வறுத்து எடுத்தார்.

“இது வெறும் கூட்டம் இல்லை, வெற்றிக்கான அச்சாரமாக மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்பு!” என அவர் முழங்க, கூட்டத்தில் கைத்தட்டல் இடி என முழங்கியது.

களைகட்டிய களம்

திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்லடம் தொகுதியின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் திரண்டு வந்திருந்தனர். தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், கனிமொழியின் வருகை பல்லடம் திமுகவினருக்குப் புது ரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது. நிகழ்ச்சி நடைபெற்ற இடம் மட்டுமின்றி, சுற்றியுள்ள சாலைகளிலும் திமுக தொண்டர்களின் தலைகளே தென்பட்டன.

DMK
பல்லடம் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசும் திமுக வேட்பாளர் செல்வராஜ்.

திருப்பூர் மாவட்டத்தின் முக்கியமான தொகுதியான பல்லடத்தில், திமுக காட்டியுள்ள இந்த பிரம்மாண்டம் மற்ற கட்சிகளைச் சற்று யோசிக்க வைத்திருக்கிறது என்பதே கள நிலவரம். மொத்தத்தில், பல்லடம் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு ‘மினி மாநாடாகவே’ முடிந்து, அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon