தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை ஓரளவுக்கு சரிந்து வருவதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தில் இருந்தது. என்னதான் நகை விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்திற்குள்ளேயே சுற்றி வருகிறது.
நேற்று மட்டுமே காலை மாலை என 2 வேளையும் தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் அதிரடியாக சரிந்தது. நேற்றைய மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.13,350க்கும், சவரனுக்கு ரூ.2,560 குறைந்து ரூ.1,06,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று (மார்ச் 27) தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,430க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.11,200க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.89,600க்கும், விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




