ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் பறக்கும் படை – அருண்ராஜ் குற்றச்சாட்டு
தேர்தல் பறக்கும் படையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மல்லசமுத்திரத்தில் தவெக நிர்வாகியின் பள்ளியில், மார்ச் 16 அன்று பூட்டியிருந்த வீட்டிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக நுழைந்து ₹23,000 மதிப்பிலான பொருள்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராதா மருத்துவமனை நடத்திய முகாமில் பூஸ்ட் பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர். விதிகளுக்குப் புறம்பாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளதாக அருண்ராஜ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.






