--- --:--:-- --

டிவி நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசிய மனோ தங்கராஜ்..!

9

னியார் தொலைக்காட்சியின் தேர்தல் பயணம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜ், ஆபாசமாக பேசியது குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், ஒரு அமைச்சர் இதைவிட அநாகரீகமாகப் பொதுவெளியில் பேச முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், ஒரு பக்கம் தேர்தல் பணிகள், மறுபக்கம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது.

 

வழக்கமா தி.மு,க.- அ.தி.மு.க என இரு திராவிட கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக இல்லாமல் இந்த தேர்தல், தி.மு.க.,கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க.. காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க, கம்யூனிஸ்ட், தே.மு.தி.க கட்சிகள் ஒரு கூட்டணியிலும், அ.தி.மு.க. பா.ஜ.க, அன்புமணி பா.ம.க, த.மா.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு கூட்டணியிலும் இணைந்துள்ளன.

 

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும், தொகுதிப்பங்கீடு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் நாகர்கோவிலில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் தேர்தல் பயணம் என்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர், அ.தி.மு.க. ஆகிய கட்சியின் உறுப்பினர்களுடன், தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 

அப்போது அவரிடம், கன்னியாகுமரியில் டைடல் பார்க் திட்டம் குறித்து தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் இல்லை என்று கேட்கப்பட்டது. இது குறித்து பதில் அளித்தபோது அமைச்சர் மனோ தங்கராஜ் ஆபாசமாக பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 2021 தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் 2 முறை கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 10-க்கு மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தார். கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அது குறித்து விரிவான அறிக்கை கேட்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். அடுத்து நாகர்கோவிலில் தொழிற்பேட்டை கொண்டுவரப்படும் என்று கூறியது தொடர்பான கேள்விக்கு, முதலில் ஜியோ டைடல் பார்க் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

 

அப்போது பெரிய டைடல் பார்க் வருவது எப்போது என்று பார்வையாளர்கள் கேட்டு சத்தம் போட, அதற்கான வேலை நடந்துகொண்டு இருக்கிறது என்று கூறிய மனோ தங்கராஜ், என்ன பிரச்னை என்று கேட்க, பார்வையாளர்களில் சிலர் ஊழல் என்று கூறியுள்ளனர். இதை கேட்ட அமைச்சர், என்ன ஊழல் டேய் நாங்கள் விசில் அடிக்கும் காலத்தில், நீங்கள் நிற்க கூட இல்லடா, உங்க அப்பாவோட கோவணத்துக்குள்ள இருந்தீங்கடா என்று ஆபாசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Right Menu Icon