விஜயின் ஜனநாயகன் படத்தை இன்று பார்க்கும் மறுஆய்வுக் குழு..!
தேர்தல் அறிவித்துள்ள நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் தொடர புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிபந்தனை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் போட்டியிடுவது எனத் தொகுதி உடன்பாடு எட்டியது.
இதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இறுதி செய்வதற்காக தனியார் விடுதியில் முதலமைச்சர் ரங்கசாமிக்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா நேற்று இரவு காத்திருந்தார். ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவந்த அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையிலான ஐவர் குழு, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் தொடர வேண்டுமானால் லட்சிய ஜனநாயகக் கட்சியைக் கூட்டணிக்குள் சேர்க்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோருடன் மன்சுக் மாண்டவியா சுமார் ஒரு மணிநேரம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் கூட்டணியை உறுதி செய்த நிலையில், என்.ஆர். காங்கிரசின் நிபந்தனை கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தொலைபேசியில் உரையாட இருப்பதாகவும், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில் தவெகவுடன் கூட்டணி அமைக்க என்.ஆர். காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






