அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மார்ச் 16ம் தேதி முதல் தொடங்குகிறது!
ஏற்கெனவே 2 முறை என்.டி.ஏ. தலைவர்களுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதிமுக செல்வாக்குள்ள சட்டமன்றத் தொகுதிகளைக் குறிவைத்து பாஜக கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிவடைந்தது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் போட்டியிட உள்ளன.
பாஜக தனக்கு ஒதுக்கப்பட்ட 14 இடங்களுக்குள்ளேயே தனது கூட்டணிக் கட்சிகளான அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி (லஜக) ஆகியவற்றுக்குத் தொகுதிகளைப் பிரித்து வழங்க உள்ளது.
கடந்த முறை 5 இடங்களில் போட்டியிட்ட அதிமுக-வுக்கு, இம்முறை எத்தனை இடங்கள் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் இது குறித்துப் பேசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை லட்சிய ஜனநாயக கட்சி (லஜக) என்.டி.ஏ கூட்டணியில் இணைகிறது. இதற்கு முதல்வர் ரங்கசாமி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது





