எகிறிய தங்கம் விலை..!
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக் கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வகையில் நேற்று ( மார்ச் 10) தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், 18 காரட் தங்கம் விலை மட்டும் கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.12,890க்கும் சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.1,03,120க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





