இன்று மாலை சென்னை வருகிறார் கே.சி.வேணுகோபால்..!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்தது.
தி.மு.க. கொடுக்கும் தொகுதிகள் தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று காங்கிரஸ் கூறிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதரம்பரம் நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க கட்சி, இந்த முறை யாரும் எதிர்பராத வகையில், தி.மு.க. கூட்டணியில் இணைந்தது.
கடந்த முறை அதிமுக ராஜ்யசபா சீட் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், அதனால் தான் தே.மு.தி.க. தி.மு.க. கூட்டணியில் இணைந்ததாகவும் கூறப்படட நிலையில், தற்போது தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் கொடுப்பதாக தி.மு.க. ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.






