அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது – சண்முகம்
போற போக்கை பார்த்தால் அ.தி.மு.கவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள்; இதை பாஜகவும் மறுக்கவில்லை என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.





