--- --:--:-- --

திருவண்ணாமலை சாலை சீரமைக்கப்படுமா? சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதில்

6

கீழ் பெண்ணாத்தூர் வழியாக பாண்டிசேரி, கிருஷ்ணகிரி, பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இன்றைக்கு திருவண்ணாமலைக்கு வரும் அதிக பக்தர்கள் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் ஒரு நிலை இருக்கிறது.

 

இந்த சாலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதுவரை அந்த சாலை தொடர்பான பணி எடுக்கப்படாமல் உள்ளது, அதேபோல் கடலூர் சாலையும் 4 வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்ப்பட்டுள்ளதாக என்று கேள்வி எழுப்பப்பட்டது.

 

இதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநில நெடுஞ்சாலைகள், 4 வழி சாலையாக மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழி சாலைகளாக மாற்ற மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு நேரடியாக கோரிக்கை வைப்பதாக கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon